Moratorium 2.0

APPLY FOR MORATORIUM

Pursuant to RBI Covid-19 regulatory package, you may apply for moratorium of you HDB Loan repayment.

In case your request for moratorium is approved, the instalment and payments due on your HDB loan for the month of June-Aug 2020 will be postponed and the applicable interest on the amount outstanding will continue to accrue during the period of moratorium.

 

Click here to apply for EMI Moratorium 2.0

 

Please Note:

  • At present you can apply for Moratorium for the month of August 2020 only and this application can be made before August 15, 2020.
  • You need to submit your moratorium request at least 2 days before EMI due date.

 

MORATORIUM CALCULATOR

Now you can download our Moratorium Calculator Excelsheet. You can use it to calculate the additional amount payable if you opt for the EMI Moratorium.

It is very simple to use, just edit the information in the yellow cells as per your loan and you will instantly get results.

 

Moratorium Calculator

 

FAQs

English हिन्दी मराठी ગુજરાતી தமிழ் తెలుగు

மொரடோரியம் (தவணை ஒத்திவைப்பு) 2.0

 

ரிசர்வ் வங்கி வழங்கும் COVID 19- ஒழுங்குமுறை தொகுப்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

COVID 19- ஒழுங்குமுறை தொகுப்பின் கீழ் கடன்களுக்கான மாதத்தவணை தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய நிவாரணம் என்ன ?

  • ஜூன் 1, 2020 மற்றும் ஆகஸ்ட் 31, 2020 க்கு இடையில் செலுத்த வேண்டிய 3 தவணைகளை தற்காலிகமாக தள்ளி வைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. (மொராட்டோரியம்- சுற்று 2)
  • இந்த காலகட்டத்தில், ஜூன் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை செலுத்த வேண்டிய தவணைத் தொகையை ஒத்திவைக்க NBFC-கள் அனுமதிக்கப்படுகின்றன.
  • அதன்படி, கடனின் மீதமுள்ள காலம் (திருப்பிச் செலுத்தும் அட்டவணை) நீட்டிக்கப்படும்.

 

குறிப்பிட்ட கால கடன்களில் (TERM LOAN) காலம் தாழ்த்திக்கொடுப்பதற்கான (MORATORIUM) வரைமுறை என்ன ?

  • காலம் தாழ்த்தி கொடுப்பது என்றால் “ ஒத்திவைப்பு ” மட்டுமே. இதுமேற்குறிப்பிட்ட 3 மாதங்களின் மாதத்தவணையினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உதாரணமாக ஒருவரின் மாதத்தவணை தேதி ஜூன் 1, 2020 ஆக இருப்பின், கடன் வழங்குபவர் 2020 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மொரடோரியம் அளித்திருந்தால், அவருடைய திருத்தி அமைக்கப்பட்ட மாதத்தவணை செப்டம்பர் 1, 2020 இருந்து தொடங்கும்.

 

கடன் வாங்கிய அனைவருக்கும் HDBFS மொரடோரியம் வழங்குகிறதா?

  • கடனை முறையாக, நிலையாக கட்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு HDBFS இந்த சலுகையை அளிக்கிறது.
  • இந்த மொரடோரியம் சலுகைக்கு யார் தகுதியானவர் ?
  1. மார்ச் 31, 2020 அன்றோ, அதற்க்கு முன்போ கடன் பெற்றவர்கள்.
  2. கடனை முறையாகவும் , தவறாமலும், நிலையாக செலுத்திக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள்.
  3. பிப்ரவரி 29, 2020 அன்று எந்தவொரு கடனிலும் ஒன்றுக்கு மேற்பட்ட EMI-ஐ தவணை பாக்கியாக வைக்காதவர்கள்.
  4. கடனின் தவணை இருப்பு காலம் (Balance Tenor) 12 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
  5. கடனின் நிலுவை தொகை (அசல்) மே 31, 2020 அன்று ஒரு லட்சத்திற்கு மேற்பட்டு இருக்கவேண்டும்.
  6. நோய் தொற்று மற்றும் லாக் டவுன் காரணமாக பணப்புழக்கத்தில் இடையூறு ஏற்படுவதை கடன் வாங்கியவர் நிரூபிக்க வேண்டும்.

 

எந்த மாதங்களின் தவணைக்கு (EMI) நான் மொரடோரியம் சலுகையை பெற முடியும் ?

  • தற்பொழுது நீங்கள் ஜுன்'20 தவணைக்ககான மொரடோரியம் சலுகைக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • நீங்கள் உங்கள் கடனுக்கான ஜூலை'2020 மற்றும் ஆகஸ்ட்'2020 மாதங்களுக்கானமொரடோரியம் சலுகையை பெற விரும்பினால், எங்கள் இணையதளத்தில் ஜூன் 25, 2020 க்கு பின்னர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

 

லாக் டவுன் காரணமாக எனக்கு பணப்பற்றாக்குறை உள்ளது. மொரட்டோரியத்திற்கான கோரிக்கையை நான் எவ்வாறு வைப்பது?

 

மொரட்டோரியத்திற்கான கோரிக்கையைபதிவு செய்ய, இங்கே கிளிக் செய்யவும்.

  1. நீங்கள் உள்நுழைந்து (Login) உங்களை அங்கீகரிக்க வேண்டும்.
  2. 4-எளிய கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
  3. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உடன்படுங்கள், கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
  4. உங்கள் கோரிக்கையை சமர்பித்தவுடன் , நீங்கள் கோரியது ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை நாங்கள் தெரிவிப்போம்.

ஒரு வேளை உங்கள் மொரடோரியம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது தங்களின் விருப்பத்தை எங்கள் இணையதளத்தில் தெரிவிக்க தவறும் பட்சத்தில் நீங்கள் “மொரடோரியம் சலுகையை பயன்படுத்த விரும்பவில்லை” என்று கருதப்பட்டு, உங்கள் வங்கி கணக்கிலிருந்து வழக்கம்போல் ஈ.எம்.ஐ (EMI) டெபிட் செய்யப்படும்.

 

மொராட்டோரியத்திற்கான கோரிக்கையை நான் எப்போது வைக்க முடியும்?

  • ஈ.எம்.ஐ (EMI) செலுத்த வேண்டிய தேதிக்கு 2 வேலை நாட்களுக்கு முன்னர் (மாதத்தின் 15 ஆம் தேதிக்கு பின்னால் அல்ல) சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன்களுக்கு மட்டும் , அந்த மாதத்திற்கான ஈ.எம்.ஐ க்கு மொரடோரியம் அளிக்கப்படும்.
  • உங்கள் மொரடோரியம் கோரிக்கை ஒப்புதல் அளிக்கப்படும் முன்னரே உங்கள் வங்கி கணக்கில் ஈ.எம்.ஐ (EMI) டெபிட் செய்யப்பட்டால் , ஏழு (7) வேலை நாட்களுக்குள் ஈ.எம்.ஐ தொகை (EMI) உங்கள் வங்கி கணக்கில் திருப்பித் தரப்படும்.

 

நான் "மார்ச் 2020 முதல் மே 2020 வரை” அளிக்கப்பட்ட மொராட்டோரியத்தின் சுற்று-1 இல் இந்த சலுகையை பெற்றிருந்தேன். எனது பழைய கோரிக்கை இந்த சுற்றில் தொடருமா?

  • இல்லை. மொராட்டோரியத்தை சுற்று-2 இல் பெற விரும்பும் வாடிக்கையாளர், மீண்டும் ஒரு புதிய கோரிக்கையை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்ய வேண்டும்.

 

இந்த மொரடோரியம் சலுகையை பெறுவது குறித்த உங்கள் அறிவுரை என்ன ? எனது கடனை திருப்பிச் செலுத்துவதற்கு போதுமான
நிதி இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

  • நோய் தொற்று / லாக் டவுன் காரணமாக உங்கள் பணப்புழக்கத்தில் இடையூறு ஏற்பட்டால் மட்டுமே இந்த தொகுப்பின் கீழ் நன்மைகளைப் பெற நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
  • கடன்களுக்கான வட்டி உங்கள் கணக்கில் தொடர்ந்து வந்து சேர்கிறது என்பதையும், அது அதிக செலவுகளை கொடுப்பதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • எடுத்துக்காட்டாக, உங்களிடம் மார்ச் 1, 2020 அன்று ரூ .4,79,000 / - அசல் நிலுவைத் தொகையுடன் ஒரு தனி நபர் கடன் (Personal Loan) (கடன் தொகை - ரூ .5 லட்சம் / 36 மாத தவணை ) இருந்தால், இந்த மொரடோரியம் சலுகை கால முடிவில் ரூ .25,000 / - கூடுதல் வட்டி உங்கள் நிலுவையில் சேர்க்கப்படும். இது உங்களுக்கு ஒரு கூடுதல் சுமையாகலாம்.

 

எச்டிபி-இல் எனது பெயரில் உள்ள அனைத்து கடன்களுக்கும் (All Active Loans) எனக்கு மொரடோரியம் வழங்கப்படுமா அல்லது ஒவ்வொரு கடன் கணக்கிற்கும் தனித்தனியாக கோரிக்கை கொடுக்க வேண்டுமா?

  • நீங்கள் இந்த மொரடோரியம் சலுகையை பெற தகுதியுடையவராக இருந்தால், HDB-இல் உங்கள் பெயரில் உள்ள அனைத்து கடன்களுக்கும் (All Active Loans) இந்த சலுகை அளிக்கப்படும்.
  • மேலும்,இந்த சலுகை காலத்திற்கான பொருந்தக்கூடிய கூடுதல் வட்டி செலவை நீங்கள் ஏற்கத் தயாராக உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

 

ஏதேனும் ஆவணங்கள், புதிய NACH டெபிட் ஆணை (ACH Debit Mandate) ஆகியவற்றை நான் சமர்ப்பிக்க வேண்டுமா?

  • கடன் வாங்கியவர் HDB நிறுவனத்திற்குத் தேவையான புதிய NACH டெபிட் ஆணையை வழங்க வேண்டியிருக்கலாம்.
  • உங்கள் தற்போதைய ACH ஆணையை சரிபார்த்த பிறகு, HDB இது தொடர்பாக உங்களுக்கு ஆலோசனை வழங்கும்.

 

இந்த மொரடோரியம் கால கட்டத்தில் எனது வங்கிக் கணக்கிலிருந்து எனது ஈ.எம்.ஐக்கள் (EMI) டெபிட் செய்யப்படுமா ?

  • உங்கள் மொரடோரியம் கோரிக்கை ஈ.எம்.ஐ(EMI) டெபிட் செய்யப்படும் தேதியிலிருந்து 2 நாட்களுக்கு முன் பெறப்பட்டு, உங்களுக்கு இச் சலுகை பொருந்துமானால், நாங்கள் ஒரு சிறந்த முயற்சி அடிப்படையில், வங்கியின் தவணையை தள்ளி வைக்க அல்லது ஒத்திவைக்க முயற்சி செய்வோம்.
  • மற்றவர்களுக்கு, திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி தவணைகள் பெறப்படும்.

 

மார்ச் 1, 2020 நிலவரப்படி தவணை கட்ட தவறிய / தாமதமான கணக்குகளுக்கு (Delinquent accounts) என்ன நடக்கும்?

  • அபராத கட்டணங்கள், கூடுதல் வட்டி, மற்றும் கடன் மதிப்பீடு குறைப்பு ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக, 2020 மார்ச் 1 அல்லது அதற்கு முன்னர் நிலுவையிலுள்ள தவணைகள் / பிற தொகைகள் செலுத்தப்பட வேண்டும்.