COVID-19: ஒழுங்கு முறை தொகுப்பு : கடன்களின் மாதத்தவணை தொடர்பாக RBI அறிவித்துள்ள சலுகைகள் என்ன ?
- வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC ) தங்களுடைய வாடிக்கையாளர்களின் 3 மாத தவணையினை காலம் தாழ்த்திக்கொடுப்பதற்கான சட்ட உரிமையினை ( MORATORIUM) அளித்துள்ளது.
- இதன் மூலம் மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 வரையிலான 3 மாதத்தவணையினை ஒத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இதனால் வாடிக்கையாளரின் திருப்பிச்செலுத்தும் காலம் ( TENOR) அதிகரிக்கும்.
குறிப்பிட்ட கால கடன்களில் ( TERM LOAN ) காலம் தாழ்த்திக்கொடுப்பதற்கான வரைமுறை என்ன ? (MORATORIUM)
- காலம் தாழ்த்தி கொடுப்பது என்றால் “ ஒத்திவைப்பு ” மட்டுமே இதுமேற்குறிப்பிட்ட 3 மாதங்களின் மாதத்தவணையினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உதாரணமாக ஒருவரின் மாதத்தவணை தேதி ஏப்ரல் 1, 2020 ஆக இருப்பின் அவருடைய திருத்தி அமைக்கப்பட்ட மாதத்தவணை ஜூன் 1, 2020 இல் இருந்து தொடங்கும்.
இந்த சலுகை அனைவருக்கும் அளிக்கப்படுமா ?
- மார்ச் 1, 2020 அன்று வாராக்கடன்கள் ( NPA ) அல்லாத அனைத்து கடன்களுக்கும் இது பொருந்தும்.
- மார்ச் 2020 தவணையை முறையாக செலுத்திய வாடிக்கையாளருக்கு இந்த சலுகை ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு மட்டுமே அளிக்கப்படும்.
என்னிடம் போதுமான நிதி உள்ளது. இருப்பினும், இந்தச்சலுகையினை நான் பெறலாமா ? உங்கள் பரிந்துரை என்ன ?
- உங்களுக்கு இக்காலச்சூழலில் பணபற்றாகுறை இருப்பின் , இச்சலுகையை பெறுவது நல்லது.
- இக்கடன்களின் வட்டி உங்களுக்கு ஒரு கூடுதல் சுமையாகலாம் மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலமும் அதிகரிக்கும்.
- உதாரணமாக உங்களின் நுகர்பொருள் ( CONSUMER DURABLE ) கடனின் அசல் தொகை ரூ 10000/- (பத்தாயிரமாக) மார்ச் 1, 2020 அன்று இருப்பின், நீங்கள் கூடுதல் வட்டியாக ரூ 455/- இந்தச்சலுகை கால முடிவில் செலுத்த வேண்டியிருக்கும்.
அனைத்து வாடிக்கையாளரும் இச்சலுகையை கட்டாயமாக ஏற்று கொள்ள வேண்டுமா? எனக்கு இச்சலுகை (MORATORIUM) வேண்டாமென்றால் என்ன செய்ய வேண்டும் ?
- இச்சலுகையை ஏற்பது கட்டாயமில்லை ( NOT MANDATORY ).
- உங்களுக்கு பணப்பற்றாக்குறை இல்லாதிருப்பின், இந்த காலம் தாழ்த்தி கொடுக்கும் சலுகையினை ஏற்க வேண்டாம் என பரிந்துரைக்கிறோம். Opt-out
எப்படி செய்வது ?
- SMS “NO” என்று டைப் செய்து உங்களின் பதிவு செய்யப்பட்டுள்ள கைப்பேசி ( MOBILE ) எண்ணிலிருந்து +91 9718307888 என்ற எண்ணிற்க்கு தகவல் அனுப்பவும்.
- மேலே உள்ள Opt-out என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து - நீங்கள் செலுத்த வேண்டிய தவணையை (EMI), உங்கள் தவணை தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் செலுத்துங்கள்.
- உங்களின் கணக்கு விபரங்களுடன் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும், மின்னஞ்சல் – moratoriumhelp@hdbfs.com
- நீங்கள் இச்சலுகையை ( OPT – OUT ) செய்து விட்டால், உங்களுடைய அடுத்தடுத்து மாத தவணைகள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பெறப்படும்.
இந்த சலுகையினை (MORATORIUM) பெற நான் என்ன செய்ய வேண்டும் ?
- எவ்வித கோரிக்கை மனுவோ கடிதமோ தேவைப்படாது.
- இது அணைத்து வாராக்கடன்கள் ( NPA ) அல்லாத கடன்களுக்கும் பொதுவாக பொருந்தும் .
- மார்ச் 2020 தவணையினை முறையாக செலுத்திய வாடிக்கையாளருக்கு இது, ஏப்ரல் மற்றும் மே 2020 ஆகிய மாதங்களுக்கு மட்டும் பொருந்தும் / அளிக்கப்படும்.
இச்சலுகையினை நான் இப்பொழுது பெற்றால், என்னுடைய மாதத்தவணைகள் மே 31,2020 வரை தள்ளி வைக்கப்படும். அதன் பின் எவ்வாறு என் கடன் கணக்கு திருத்தி அமைக்கபடும் ?
- இச்சலுகை காலத்தில் உங்களின் கடன் கணக்கில் உள்ள அசலின் வட்டி கணக்கிடப்படும்.
- சலுகை காலம் முடிந்த பின்னர் இந்த வட்டி அசலுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டு உங்களின் கடன் திருப்பி செலுத்தும் அட்டவணை திருத்தி அமைக்கப்படும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்களின் திருப்பி செலுத்தும் காலம் (TENOR) அதிகமாகும்.
நான் மார்ச் 2020 மாத தவணையினை செலுத்தி விட்டேன். இப்பொழுது இந்த (MORATORIUM) சலுகையை பெற எண்ணுகிறேன். நான் செலுத்திய மார்ச், 2020 மாதத்தவணை திரும்ப கிடைக்குமா ?
- இல்லை. நீங்கள் செலுத்திய தவணை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதை திருப்பி தரும் வழிகள் எங்களிடம் இல்லை.
ஏன் இந்தச்சலுகை காலத்தில் வட்டி பெறப்படுகிறது ? / இந்த காலத்தில் எனது கடன் கணக்கு எவ்வாறு இருக்கும் ?
- இந்த சலுகையானது - தவணை ஒத்தி வைப்பு அல்லது தள்ளி வைப்பது மட்டுமே. இது தவணை தள்ளுபடி அல்ல, எனவே வட்டி கணக்கீடு முறை மாறாது.
- சலுகை காலம் முடிந்த பின்னர் இந்த வட்டியானது அசலுடன் சேர்க்கப்பட்டு. உங்களின் கடன் திருப்பிச்செலுத்தும் அட்டவணை திருத்தம் செய்து மாற்றி அமைக்கபடும், அவ்வாறு நடக்கும் போது, உங்கள் திருப்பி செலுத்தும் காலம் அதிகரிக்கலாம்.
- நுகர்பொருள் ( CONSUMER DURABLE ) மற்றும் டிஜிட்டல் கடன்கள் - 0 % வட்டி முறையில் பெறப்பட்டிருந்தால், அக்கடன்களுக்கான வட்டி FRR எனப்படும் CURRENT FLOATING REFERENCE RATE முறையில் கணக்கிடப்படும்.
- நீங்கள் வட்டி மட்டும் செலுத்தும் முறை (INTEREST ONLY) தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் கடன் திருப்பி செலுத்தும் அட்டவணையில் எந்த மாறுதலும் இருக்காது.
இந்தச் சலுகையினை நான் பெறுவதினால் என்னுடைய கடன் மதிப்பீட்டு எண்ணில் ( CREDIT RATING ) பாதிப்பு ஏற்படுமா?
- இல்லை
2020 மார்ச் 1 அல்லது அதற்கு முன்னர் குற்றமற்ற / இயல்புநிலை / தாமதமான கணக்குகளுக்கு என்ன நடக்கும்?
- இந்த சலுகையானது மார்ச் 1, 2020 முதல் மே 31, 2020 உள்ள தவணைகளுக்கு மட்டுமே அனுமதிக்கபடுகிறது.
- 01 மார்ச் 2020 அன்று தவணைத்தொகை நிலுவையிலுள்ள கணக்குகள் மற்றும் இதர பாக்கிகள் உள்ள கணக்குகள் அனைத்தும் ஒழுங்கு படுத்தல் அவசியமாகும். அவ்வாறு தவறும் பட்சத்தில், உங்கள் கடன் மதிப்பீடு ( CREDIT RATING ) குறைக்கப்படலாம் மற்றும் அபராத தொகையும் கட்ட நேரிடும்.